வெயில் காலங்களில் ஸ்மார்ட் போன் சூடாவதை தவிர்க்க 10 வழிமுறைகள்

by Srinivasan
4 minutes
வெயில் காலங்களில் ஸ்மார்ட் போன் சூடாவதை தவிர்க்க 10 வழிமுறைகள்

ஸ்மார்ட் போன்கள் பொதுவாக சூடாகும் பண்பினை கொண்டவை. தற்போது  வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால்  ஸ்மார்ட்போன்கள்  மேலும் சூடாக அதிக வாய்ப்புள்ளது. ஸ்மார்ட் போனின் வெப்பத்தை குறைக்கும் வழிமுறைகளை இப்பதிவில் காணலாம்.

1. ஒரே சமயத்தில் நிறைய செயலிகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

பொதுவாக ஒன்றிற்கும் மேற்பட்ட செயலிகளை பயன்படுத்தும் போது அதிகமான இண்டர்நெட்  மற்றும் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. பேட்டரி பயன்பாடு அதிகரிக்கும் போது ஸ்மார்ட்போனின் வெப்பம் அதிகரிக்கிறது. உபயோகிக்காத செயலிகளை ஆஃப் செய்வதின் மூலம் ஸ்மார்ட் போன் சூடாவது தடுக்கப் படுகிறது.

2. மொபைல் போன்களை சூரிய வெளிச்சத்தில் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

சூரிய கதிர்வீச்சு பொதுவாக ஓர் பொருளின் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது. மொபைல் போனை சூரிய கதிர்வீச்சு படாதவாறு பயன்டுத்துவதால் வெப்ப அதிகரிப்பு தடுக்கப் படுகிறது.

3. திரையின் பிரகாசத்தை குறைத்தல் 

திரையின் பிரகாசத்தை குறைப்பதால் பேட்டரி பயன்பாட்டை குறைத்து போன் சூடாவதை தவிர்க்கலாம்.

4. ஜி.பி.எஸ் மற்றும் ப்ளூடூத் பயன்பாட்டை தவிர்க்கவும்

ஜி.பி.எஸ், ப்ளூடூத் மற்றும் வை-பை போன்ற தொழிற்நுட்ப பயன்பாட்டின்போதும் மின்னாற்றல் அதிகம் பயன்படுத்தப்பட்டு போனின் வெப்பம் அதிகரிக்கிறது.

5. பேட்டரியை வற்றச்செயும்  செயலிகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும் 

கேமரா மற்றும் கேம்ஸ் போன்றவை பயன்படுத்தப் படும் போதும் அதிகபட்சமான பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் பயன்பாட்டை குறைத்து கொண்டால் போனின்  வெப்பத்தை குறைக்கலாம்.

6. பேக் கேஸ் ( Back Case) பயன்படுத்துவதை தவிர்க்கவும் 

உங்கள் போன் ஏற்கனவே அதிக வெப்பம் அடையும் பண்பை கொண்டு இருந்தால் பேக் கேஸ் பயன்படுத்துவதை தவிர்த்து குளிர்ந்த காற்றில் போனை வைப்பதால் வெப்பம் தவிர்க்கப்படும்.

7. செயலிகளை புதுப்பிக்கவும் மற்றும் தேவையற்ற செயலிகளை நீக்கவும் 

செயலிகளை புதுப்பிப்பதால் அதன் செயல்திறன் அதிகரித்து பேட்டரி பயன்பாடு குறைகிறது. மேலும் தேவையற்ற செயலிகளை நீக்குவதால் தகவல் பயன்பாடு குறைகிறது. மேற்கண்டவைகளால் போனின் வெப்பம் குறைகிறது.

8. குறைவான பேட்டரியின் போது போனை பயன்படுத்தாதீர்கள் 

குறைவான பேட்டரியின் போது ஸ்மார்ட் போனை பயன்படுத்துவதால் பேட்டரியின் வாழ்நாள் குறைவதோடு போனின் வெப்பம் அதிகரிக்கிறது.

9. மின்னூட்டம் செய்ய அசல் கருவிகளை பயன்படுத்தவும் 

அசல் கருவிகளுக்கு பதிலாக போலி கருவிகளால் மின்னூட்டம் செய்வதால் மொபைல் வெப்பம் அடைவதோடு போனின் செயல் திறன் குறைகிறது.

10. மின்னூட்டம் செய்யும்போது போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும் 

மின்னூட்டம் செய்யும்போது பொதுவாக போன் சூடேறும் பண்பை கொண்டது,  மேலும் அச்சமயம் போனை பயன்படுத்துவதால் அதன் வெப்பம் மேலும் அதிகரிக்கிறது. ஆதலால் மின்னூட்டம் செய்யும்போது போன் பயன்பாட்டை தவிர்க்கவும்.

மற்ற செய்திகளையும் படித்து பகிருங்கள்:

5ஜி தொழிற்நுட்பம் மற்றும் ஸ்னாப்டிராகன் செயலியில் உருவாக்கம் பெற்ற போகோ F2 ப்ரோ

கூகுள் மீனா vs பேஸ்புக் ப்ளெண்டர் - சாட்பாட் யுத்தம்

COVID-19 காலத்தில் புதிய அம்சங்களுடன் சந்தைக்கு வந்துள்ள அலெக்சா

எம்.ஐ 10 மாடலை 108MP க்வாட் கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 865 செயலியுடன் அறிமுகப்படுத்தியது ஸியோமி

டெஸ்க்டாப்பில் புதுப்பிப்பு கொண்டு வந்துள்ள பேஸ்புக்

சர்வதேச முடக்குதல் காலத்தில் இண்டர்நெட் இணைப்பை வேகமாக்கும் 5 எளிய முறைகள்

பிட்பேண்டில் ஜி.பி.எஸ் ஆ? விற்பனைக்கு வருகிறது பிட்பிட் சார்ஜ் 4

வை-பை (Wi-Fi) மூலம் இலவசமாக பேசுவது எப்படி?

யூ.பி.ஐ மூலமும் சந்தாவைச் செலுத்த அனுமதி வழங்கிய யூட்யூப்

எம் ஐ 10 யூத் (Mi 10 Youth 5G) : 5ஜி மற்றும் க்வாட்(Quad) கேமரா தொழிற்நுட்பத்தில் உருவாக்கம் பெற்ற ஸியோமீயின் புதிய ஸ்மார்ட் போன்

வாட்ஸாப்: குழும அழைப்பின் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு??

GST திருத்தத்திற்கு பின் Rs.20,000க்குள் கிடைக்கும் சிறப்பான 5 ஸ்மார்ட் போன்கள்

நிகழ்நிலை வீடியோ சந்திப்பிற்கு "ZOOM" செயலி பாதுகாப்பானதா? மாற்றுச் செயலி பாதுகாப்பானதா??

எந்தெந்த நிறுவனங்கள் COVID-19 பாதிப்பின் காரணமாக ஸ்மார்ட்போன்களின் வாரண்ட்டி நாட்களை நீட்டித்துள்ளன?

மோட்டோரோலா எட்ஜ்+ பிரீமியம் ஸ்மார்ட் போன்களுக்கு போட்டியாக இருக்குமா ?

ஒன்பிளஸ் 8 சீரிஸ்: ஒன்பிளஸ் தயாரிப்பில் அதன் தடத்தை இழந்துவிட்டதா?