மோட்டோரோலா எட்ஜ்+ பிரீமியம் ஸ்மார்ட் போன்களுக்கு போட்டியாக இருக்குமா ?

by Srinivasan
2 minutes
மோட்டோரோலா எட்ஜ்+ பிரீமியம் ஸ்மார்ட் போன்களுக்கு போட்டியாக இருக்குமா ?

ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற முன்னணி நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாக பிரீமியம் முதன்மை (flagship) மொபைல்களை உற்பத்தி செய்து வருகிறது. மோட்டோரோலா நிறுவனம் கடந்த வருடம் மோட்டோ razr என்ற பிரீமியம் மாடலை சந்தைக்கு கொண்டு வந்தது. மோட்டோ razr ஒரு விலை உயர்ந்த மொபைல் என்பதால் அதீத வாடிக்கையாளர்களை ஈர்க்கவில்லை. அதன் பிறகு மோட்டோ நிறுவனம்  பிரீமியம் மாடல்களைப் பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. தற்போது மோட்டோ எட்ஜ் பிளஸ் என்ற மாடலை சந்தைக்கு கொண்டு வர இருக்கிறது.

காட்சி கருவி (Display)

மோட்டோ நிறுவனம் பெருமைக்குரிய வகையில் தனது டிஸ்பிலே-வை உருவாக்கியுள்ளது. Glass sandwich டிசைனும், அலுமினியத்தால் ஆன சட்டகமும்  கொண்டுள்ளது.  6.7" FHD + OLED டிஸ்பிலே கொண்டுள்ள  மோட்டோ எட்ஜ் பிளஸ் புதுப்பிப்பு வீதத்தை 90Hz அளவு கொண்டது. மோட்டோ எட்ஜ் பிளஸ் HRD+ தொழிற்நுட்பத்தையும், மொபைல் unlock செய்ய இன்-டிஸ்பிலே பிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display finger print sensor) தொழிற்நுட்பத்தையும் கொண்டு செயல்படுகிறது. டிஸ்பிலே பாதுகாப்பிற்கு  Corning's கொரில்லா கிளாஸ் 5 எனும் வகை பயன்படுத்தப்பட்டுளள்து.

Moto edge+ display

செயலி (Processor)

மோட்டோ எட்ஜ் பிளஸ் Snapdragon 865 எனும் முதன்மை (flagship) செயலியை பயன்படுத்தியுள்ளது. Adreno 650 வகை  GPU பயன்படுத்தியுள்ளது. 5ஜி தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட முதல் மோட்டோ மொபைல் மோட்டோ எட்ஜ் பிளஸ் ஆகும்.

காமிரா (Camera)

மோட்டோ எட்ஜ் பிளஸ் flagship grade பின் காமிராவைக் கொண்டு உருவாக்கம் பெற்றுள்ளது. முதன்மை கேமரா 108MP திறனும், சாம்சங்  Isocell bright HMX சென்சாரையும், aperture திறன் f/1.8 அளவும் கொண்டதாகும். பின்னிங்(binning) டெக்னாலஜி மூலம்  27MP திறன் கொண்டு புகைப்படம் எடுக்கிறது. இரண்டாம் நிலை கேமரா  8MP திறன் கொண்டும்,  3X பெரிதாக்கும் திறனுடன், aperture திறன் f/2.4 அளவையும் கொண்டுள்ளது.

மூன்றாம் நிலை கேமரா 16MP திறன் கொண்டும் , aperture  f/2.2 அளவு கொண்டும்,  Wide angle  lens 117 degree FOV கொண்டும் செயல்படுகிறது. TOF எனும் சென்சார் Depth measurement மற்றும் 3D  மேப்பிங் காக மோட்டோ எட்ஜ் பிளஸ் மாடலில் உள்ளது. பிரோன்ட் கேமரா 25MP திறனும், aperture திறன் f/2.0 அளவும் பெற்றுள்ளது. 

Motorola Edge+ camera

பேட்டரி திறன் (Battery)

மோட்டோ எட்ஜ் பிளஸ் 5000mah அளவிற்கு மின்னாற்றல் சேமிக்கும் திறன் கொண்டுள்ளது. அதோடு 18W அதீத வேக  மின்னாற்றல் சேமிக்கும் பண்பையும் கொண்டுள்ளது. 15W wireless மின்னூட்டம் மற்றும் 5W wireless திருப்பு மின்னூட்டம் பண்பையும் கொண்டு இயங்குகிறது. மோட்டோ எட்ஜ் பிளஸ் Dual stereo ஒலிபெருக்கி மற்றும் ஒரு ஹெட்போன் ஜாக்கி-யையும் கொண்டது.

உள்ளமைவு மற்றும் விலை 

Moto edge+ colors

UFS 3.0 storage தொழிற்நுட்பம் கொண்டு 12GB DDR-5 RAM மற்றும் 256GB ROM  கொண்டு உருவாக்கம் பெற்றுள்ளது. Smoky Sangria மற்றும் Thunder Grey வண்ணங்களில் சந்தைக்கு வருகிறது. Android 10 OS மோட்டோ எட்ஜ் பிளஸ் மாடலில் பயன்பத்தப்பட்டுள்ளது. இதனுடைய இந்திய விலை விரைவில் அந்நிறுவனத்தால் தீர்மானிக்கப்படும்.

மோட்டோ எட்ஜ் பிளஸ் சிறப்பு விற்பனையாக வெரிசான் நிறுவனத்தால் USD 999-க்கு  USA-இன் சந்தைக்கு வருகிறது. இது இந்தியன் மதிப்பில் தோராயமாக Rs. 76, 191 ஆகும். மோட்டோ எட்ஜ் பிளஸ் முன்னணி மொபைல்களுக்கு  சரியான  போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.