எம்.ஐ 10 மாடலை 108MP க்வாட் கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 865 செயலியுடன் அறிமுகப்படுத்தியது ஸியோமி

by Srinivasan
3 minutes
எம்.ஐ 10 மாடலை 108MP க்வாட் கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 865  செயலியுடன்  அறிமுகப்படுத்தியது  ஸியோமி

ஸியோமி நிறுவனம் எதிர்பார்த்தது போல் முதன்மை ஸ்மார்ட் மொபைல் மாடல் ஆன எம்.ஐ 10-ஐ  சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் 108MP முதன்மை கேமரா மற்றும் 5ஜி தொழிற்நுட்பமாகும்.

எம்.ஐ 10 கொண்டுள்ள சிறப்பு அம்சங்களைப் பற்றிக் காணலாம்.

காட்சிப்பொருள் 

எம்.ஐ 10 அழகிய கண்ணாடி சாண்ட்விச் வடிவத்தையும், 6.67 FHD + 3D வளைந்த  AMOLED காட்சிப்பொருளையும் கொண்டது. புதுப்பிப்பு வீதம் 90Hz அளவீடும், தொடு மாதிரி வீதம் 180Hz அளவீடும் கொண்டுள்ளது. காட்சிப் பொருளின் தொழிற்நுட்பம் AMOLED என்பதால் ஆப்டிகல் இன்-டிஸ்பிலே பிங்கர் பிரிண்ட் சென்சாரை பயன்படுத்தி வருகிறது.

செயலி 

எம்.ஐ 10 ஸ்மார்ட் போனில் ஸ்னாப்டிராகன் 865 ப்ராஸஸர் மற்றும் கிராபிக்ஸ் செயல்திறனுக்கு அட்ரீனோ 650 ஜி.பி.யூம் பயன்படுத்தப்பட்டுள்ளது. செயலி 865 குவால்காம் நிறுவனத்தின் முதன்மை செயலியாகும். இதன் செயல்திறன் பயனருக்கு மென்மையான அனுபவத்தை வழங்குகிறது.

கேமரா 

எம்.ஐ 10 க்வாட் கேமரா தொழிற்நுட்பத்தை தழுவியது. முதன்மை கேமரா 108MP கேமரா திறன் கொண்ட சாம்சங் ஐசோசெல் எச்.எம்.எக்ஸ் சென்சார் மற்றும் f/1.69 துவாரத்திறனைப் பெற்றுள்ளது. இரண்டாம் நிலை கேமரா 13MP வைட் அங்கிள் லென்ஸ் மற்றும் f/2.4 துவாரத் திறன் காட்சி புலன் 123° அளவீட்டையும் கொண்டு செயல்படுகிறது. மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை கேமரா 2MP  திறன் மற்றும் முறையே மேக்ரோ மற்றும் டெப்த் சென்சார்களை கொண்டு செயல்படுகிறது. முதன்மை கேமரா ஆப்டிகல் இமேஜ் ஸ்டபிலைசேஷன் தொழிற்முறையைச் சார்ந்ததால் 8K ரிசொலுஷன்  வரை படங்களை பிடிக்கலாம்.முன் கேமரா 20MP திறன் வாய்ந்தது.

பேட்டரி

4780mah பேட்டரி திறன் கொண்டது. 30W கம்பி மற்றும் கம்பியற்ற முறையில் மின்னூட்டம் செய்யலாம். அதோடு 30W அதிவேக மின்னூட்ட முறையையும் கொண்டுள்ளது.

மென்பொருள் மற்றும் கூடுதல் அம்சங்கள் 

எம் ஐ 10 ஆண்ட்ராய்டு 10 மென்பொருள் கொண்டு செயலாற்றுகிறது. டூயல் ஸ்டீரியோ வகை ஒலிபெருக்கிகளை கொண்டதோடு ஐ.ஆர்.பிளாஸ்டர் தொழிற்நுட்பத்தையும் பெற்றுள்ளது.

உள்ளமைவு மற்றும் விலை 

எம்.ஐ 10 ஸ்மார்ட் போன்  8GB RAM மற்றும் 128GB ROM வகை Rs. 49, 999க்கும், 12GB RAM மற்றும் 256GB ROM வகை Rs.54, 999க்கும் கோரல் க்ரீன், ட்விலைட் கிரே போன்ற வண்ணங்களில் சந்தைக்கு வருகிறது. ஸியோமி நிறுவனம்  ஆன்லைன் மற்றும் விற்பனைக் கடைகளில் மே 18 வரை  முன்பதிவு செய்ய அனுமதித்துள்ளது.

மற்ற செய்திகளையும் படித்து பகிருங்கள்:

டெஸ்க்டாப்பில் புதுப்பிப்பு கொண்டு வந்துள்ள பேஸ்புக்

சர்வதேச முடக்குதல் காலத்தில் இண்டர்நெட் இணைப்பை வேகமாக்கும் 5 எளிய முறைகள்

பிட்பேண்டில் ஜி.பி.எஸ் ஆ? விற்பனைக்கு வருகிறது பிட்பிட் சார்ஜ் 4

வை-பை (Wi-Fi) மூலம் இலவசமாக பேசுவது எப்படி?

யூ.பி.ஐ மூலமும் சந்தாவைச் செலுத்த அனுமதி வழங்கிய யூட்யூப்

எம் ஐ 10 யூத் (Mi 10 Youth 5G) : 5ஜி மற்றும் க்வாட்(Quad) கேமரா தொழிற்நுட்பத்தில் உருவாக்கம் பெற்ற ஸியோமீயின் புதிய ஸ்மார்ட் போன்

வாட்ஸாப்: குழும அழைப்பின் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு??

GST திருத்தத்திற்கு பின் Rs.20,000க்குள் கிடைக்கும் சிறப்பான 5 ஸ்மார்ட் போன்கள்

நிகழ்நிலை வீடியோ சந்திப்பிற்கு "ZOOM" செயலி பாதுகாப்பானதா? மாற்றுச் செயலி பாதுகாப்பானதா??

எந்தெந்த நிறுவனங்கள் COVID-19 பாதிப்பின் காரணமாக ஸ்மார்ட்போன்களின் வாரண்ட்டி நாட்களை நீட்டித்துள்ளன?

மோட்டோரோலா எட்ஜ்+ பிரீமியம் ஸ்மார்ட் போன்களுக்கு போட்டியாக இருக்குமா ?

ஒன்பிளஸ் 8 சீரிஸ்: ஒன்பிளஸ் தயாரிப்பில் அதன் தடத்தை இழந்துவிட்டதா?