எம் ஐ 10 யூத் (Mi 10 Youth 5G) : 5ஜி மற்றும் க்வாட்(Quad) கேமரா தொழிற்நுட்பத்தில் உருவாக்கம் பெற்ற ஸியோமீயின் புதிய ஸ்மார்ட் போன்

by Srinivasan
2 minutes
எம் ஐ 10 யூத் (Mi 10 Youth 5G) : 5ஜி மற்றும் க்வாட்(Quad) கேமரா தொழிற்நுட்பத்தில் உருவாக்கம் பெற்ற ஸியோமீயின் புதிய ஸ்மார்ட் போன்

சீனாவில் சீயோமீ நிறுவனம் எம் ஐ 10 யூத் 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. 5ஜி தொழிற்நுட்பத்தில் மலிவான விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் போன்களில்  எம் ஐ 10 யூத்-தும் ஒன்றாகும். தீவரச் சந்தைப் போட்டியில் எம் ஐ 10 யூத் ஸ்மார்ட் போன் கொண்டுள்ள சிறப்பு அம்சங்களை பற்றிக் காண்போம்.

காட்சிக் கருவி

எம் ஐ 10 யூத் ஸ்மார்ட் போனின் டிஸ்ப்ளே மிகவும் அழகான வடிவத்தைக் கொண்டுள்ளது.  6.57" FHD+ AMOLED வகை காட்சிக் கருவியைக் கொண்டு செயலாற்றுகிறது. புதுப்பிப்பு வேகம் 180hz கொண்டது. டிஸ்ப்ளே பாதுகாப்பிற்கு கொரில்லா கிளாஸ் 5 பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன் அன்லாக் செய்ய இன்- டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் தொழிற்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ப்ராஸஸர்

எம் ஐ 10 யூத் ஸ்மார்ட் போன் ஸ்னாப்ட்ராகன் 765ஜியைக் கொண்டு இயங்குகிறது. ஸ்னாப்ட்ராகன் 765ஜி லேட்டஸ்ட் சிப்செட்  என்பது குறிப்பிட தக்கது. இது 5ஜி தொழிற்நுட்பம் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு பிரீமியம் நடுநிலை ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. மேலும் அட்ரீனோ 620 வகை GPU கிராபிக்ஸ் செயல்திறனுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளது.

கேமரா

எம் ஐ 10 யூத் க்வாட் கேமரா திறன் பெற்றது. முன் கேமரா 48MP சென்சார் மற்றும் f/1.79 துவார(aperture) திறன் பெற்றும் செயல்படுகிறது. இரண்டாம்நிலை கேமரா 8MP பெரிஸ்கோப் லென்ஸ் மற்றும் f/3.4 துவார திறன் பெற்றும் செயல்படுகிறது. பெரிஸ்கோப் லென்ஸ் கேமரா 5X ஆப்டிகல் ஜூம்,10X டிஜிட்டல் ஜூம் மற்றும் 50X பெரிஸ்கோப் ஜூம் செய்யும் திறன் வாய்ந்தது. மூன்றாம் நிலை கேமரா 8MP அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் f/2.2 துவார திறனோடு 120° காட்சி திறனும் பெற்றது. நான்காம் நிலை கேமரா 2MP  மேக்ரோ சென்சார் மற்றும் 2 செ.மீ வரை படம் பிடிக்கும் திறன் கொண்டது. எம் ஐ 10 யூத் 10 ஸ்மார்ட் போன் 16MP பிரன்ட் கேமரா கொண்டு,  போர்ட்ரைட் மோட் மற்றும் ஸ்லோ மோஷன் வீடியோ தொழிற்நுட்பத்தை அதனுள் பெற்றுள்ளது.

பேட்டரி

4160 mah திறன்கொண்டு எம் ஐ 10 யூத் இயங்குகிறது. 22.5W வேகமான மின்னாற்றல் சேமிக்கும் திறன் கொண்டது இதன் சிறப்பு. மேலும் குயிக் சார்ஜ் 4 பிளஸ் மற்றும் யூஸ்பி பவர் டெலிவரி  3.0 போன்ற அதி வேகமான மின்னாற்றல் சேமிக்கும் தொழிற்நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளமைவு

எம் ஐ 10 யூத் ஸ்மார்ட் போன்  6GB மற்றும் 8GB LPDDR4X RAM மற்றும் 64GB, 128GB மற்றும் 256GB ROM பிரிவில்  சந்தைக்கு வருகிறது. UFS 2.1 ஸ்டோரேஜ் தொழிற்நுட்பத்தில் செயல்படுவதுடன்  ஆண்ட்ராய்டு 10 மற்றும் மியி 11 ஓ.ஸ்.களில் செயல்படுகிறது. (மெமரி கார்டு ஸ்லாட் இந்த மொபைலில் இல்லை என்பது குறிப்பிட தக்கது).

விலை

எம் ஐ 10 யூத் பேஸ் வேரிஎண்ட் 2099(Rs.22, 500) யுவானுக்கும் ஹையர் எண்ட் மாடல் 2799 யுவனுக்கும்(Rs. 30, 000) சீன சந்தைக்கு வருகிறது.

இந்த ஸ்மார்ட் போன் ப்ளூ, பிளாக், வைட் மற்றும் மின்ட் க்ரீன் வண்ணங்களில் சந்தைக்கு வருவது குறிப்பிட தக்கது.

எம் ஐ 10 யூத் மற்ற சந்தைகளில் எம் ஐ 10 லிட் ஜூம் என்ற பெயரில் விற்பனைக்கு வருவதாக  வதந்தி பரவி வருகிறது. இந்தியச் சந்தையில் விலை விரைவில் தீர்மானிக்கப் படும். இந்தியாவில் Rs.23, 000 க்கு எம் ஐ 10 யூத் சந்தைக்கு வந்தால் நடுநிலை முன்னணி ஸ்மார்ட் போன்களுக்கு நிச்சயம்  இடையூறாக இருக்கும்.