COVID-19 காலத்தில் புதிய அம்சங்களுடன் சந்தைக்கு வந்துள்ள அலெக்சா

by Srinivasan
3 minutes
COVID-19 காலத்தில் புதிய அம்சங்களுடன் சந்தைக்கு வந்துள்ள அலெக்சா

COVID-19 தொற்றுதலால்  அனைத்து மக்களின் அன்றாட வாழ்வு முடங்கியுள்ளது. தொற்று பரவாமல் தடுப்பதற்கு அநேக ஊழியர்கள் வீட்டிலிருந்து கொண்டே வேலை செய்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் அலெக்சா எக்கோ ஸ்பீக்கர் தினசரி பணிகளை எளிதாக்க புதிய அம்சங்களை கொண்டுவந்துள்ளது.

தினசரி பணிகளை கையாள்வதற்கு புதிய அம்சங்களுடன் அலெக்சா

சர்வேதேச கொரோனா தொற்றால் வீட்டிலிருந்து கொண்டே ஊழியர்கள் வேலை செய்து கொண்டு வருகிறார்கள். அலெக்சா கருவியில் இரண்டு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அவை ஒர்க்  ஃப்ரம் ஹோம் (Work from home) மற்றும் ஸ்டே அட் ஹோம் (Stay at home) ஆகும். ஒர்க் ஃப்ரம் ஹோம் அம்சத்தின் மூலம்  பயனர் பணி அட்டவணை உருவாக்கலாம், மேலும் ஓய்வு நேரங்களை அட்டவணைப்படுத்தி வேடிக்கை நிகழ்ச்சிகளை கேட்டு மகிழலாம். இவ்வம்சங்களை இயக்க நிலைக்கு கொண்டுவர பயனர் தனது ஸ்மார்ட்போனில் அலெக்சா செயலியில் ஹம்பர்கர் (hamburger) பட்டியலை அழுத்த வேண்டும். ரொட்டின் அம்சங்களை தேர்வு செய்ய பியூச்சர்ட் (featured) ஆப்ஷனை அழுத்தி இரண்டு புதிய நடைமுறைகளை தேர்வுசெய்து கொள்ளலாம்.

கொரோனாவிலிருந்து விலகி இருக்க உதவும் அலெக்சா 

கொரோனாவிலிருந்து விலகி பாதுகாப்பாக இருக்க 20 வினாடிகள் கைகளை கழுவ வேண்டும். பயனர் 20 வினாடிகள் கைகளை கழுவும் வண்ணம் அலெக்சா 20 வினாடிகள் ஒரு பாடல் பாடும். இதன் மூலம் குழந்தைகள் கைகளை மிகவும் சரியாக கழுவுகிறார்களா என்பதை உறுதி செய்ய இயலும்.

கொரோனா சம்பந்தப்பட்ட  கேள்விகளுக்கு பதிலளிக்கும் அலெக்சா

அமேசான் நிறுவனம் COVID-19 சர்வேதேச தொற்றுதலால்  ஒருவர்க்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்காக வாய்ஸ் அசிஸ்டன்ஸ் அம்சத்தை அலெக்சாவில் உருவாக்கியுள்ளது. நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையத்தின் அறிவுறுத்துதலின்படி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி பயனர் கொரோனா சம்மந்தப்பட்ட கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களை பெறலாம்.

மற்ற செய்திகளையும் படித்து பகிருங்கள்:

எம்.ஐ 10 மாடலை 108MP க்வாட் கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 865 செயலியுடன் அறிமுகப்படுத்தியது ஸியோமி

டெஸ்க்டாப்பில் புதுப்பிப்பு கொண்டு வந்துள்ள பேஸ்புக்

சர்வதேச முடக்குதல் காலத்தில் இண்டர்நெட் இணைப்பை வேகமாக்கும் 5 எளிய முறைகள்

பிட்பேண்டில் ஜி.பி.எஸ் ஆ? விற்பனைக்கு வருகிறது பிட்பிட் சார்ஜ் 4

வை-பை (Wi-Fi) மூலம் இலவசமாக பேசுவது எப்படி?

யூ.பி.ஐ மூலமும் சந்தாவைச் செலுத்த அனுமதி வழங்கிய யூட்யூப்

எம் ஐ 10 யூத் (Mi 10 Youth 5G) : 5ஜி மற்றும் க்வாட்(Quad) கேமரா தொழிற்நுட்பத்தில் உருவாக்கம் பெற்ற ஸியோமீயின் புதிய ஸ்மார்ட் போன்

வாட்ஸாப்: குழும அழைப்பின் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு??

GST திருத்தத்திற்கு பின் Rs.20,000க்குள் கிடைக்கும் சிறப்பான 5 ஸ்மார்ட் போன்கள்

நிகழ்நிலை வீடியோ சந்திப்பிற்கு "ZOOM" செயலி பாதுகாப்பானதா? மாற்றுச் செயலி பாதுகாப்பானதா??

எந்தெந்த நிறுவனங்கள் COVID-19 பாதிப்பின் காரணமாக ஸ்மார்ட்போன்களின் வாரண்ட்டி நாட்களை நீட்டித்துள்ளன?

மோட்டோரோலா எட்ஜ்+ பிரீமியம் ஸ்மார்ட் போன்களுக்கு போட்டியாக இருக்குமா ?

ஒன்பிளஸ் 8 சீரிஸ்: ஒன்பிளஸ் தயாரிப்பில் அதன் தடத்தை இழந்துவிட்டதா?