எம் ஐ நோட்புக் 14: கணினி துறையில் கால்தடம் பதிக்கிறது ஸியோமி நிறுவனம்

by Srinivasan
3 minutes
எம் ஐ நோட்புக் 14: கணினி துறையில் கால்தடம் பதிக்கிறது ஸியோமி நிறுவனம்

ஸ்மார்ட் போன் உலகில் பதிய பரிமாணத்தை ஏற்படுத்திய ஸியோமி நிறுவனம் தனது முதல் லேப்டாப்பை அறிமுகப்படுத்துகிறது. பிரத்யேகமாக இந்திய சந்தைக்கு கொண்டு வந்துள்ளது இந்நிறுவனம். எம் ஐ நோட்புக் 14 மற்றும் எம் ஐ நோட்புக் 14 வெரிசான் என்ற இரண்டு மாடல்களை கொண்டு வருகிறது ஸியோமி நிறுவனம். 

எம் ஐ நோட்புக் 14 ஹரிசான்

எம் ஐ நோட்புக் 14 அந்நிறுவனத்தின் முதன்மை லேப்டாப் ஆகும். 14" அளவீட்டில் காட்சித்திரை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ்ச்சின் மற்ற மூன்றை விடவும் சற்று தடிமனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திரைக்கும், இதன் உடலமைப்புக்கும் உள்ள விகிதம் 91% ஆகும். அடிப்பீடம் அலுமினியத்தால் செய்யப்பட்டு, 1.35 Kg எடை கொண்டுள்ளது. மேலும் இண்டல் நிறுவனத்தின் 10வது ஜெனரெஷனின் ஐ5 அல்லது ஐ7 செயலியைக் கொண்டு இயங்குகிறது. 2GB நிவிடியா MX 350 GPU எனும் கிராபிக்ஸ் தொழிற்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. NVme m.2 SSD வகை 512 GB ROM , DDR4 வகை 8GB RAM மற்றும் 2666 MHz கிளாக் ஸ்பீடும் கொண்டு செயல்படுகிறது. 46Wh மின்தேக்கும் திறன் கொண்டு,10மணி நேரம் வரை பயன்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது. 65W மின்னூட்டதிறன் கொண்டுள்ளது மேலும் 0 to 50% மின்னாற்றலை 30 நிமிடங்களில் சேமிக்கும் திறன் பெற்றுள்ளது. மேலும் சிக்லெட் வகை கிபோர்டு, சிசர் வகை கி சிவிட்சஸ் மற்றும் 1.6mm தட்டச்சு திறன் மேம்பாடு பெற்றள்ளது.டிராக் பேடு பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டது. A 3.1 வகையில் 2 யூ.எஸ்.பி மற்றும் ,A 2.0 வகையில் 1 யூ.எஸ்.பி C வகையில் 1 யூ.ஸ்.பி, 1 3.5mm ஆடீயோ ஜாக் மற்றும் ஒரு எச். டி.எம்.ஐ கொண்டுள்ளது.

எம் ஐ நோட்புக் 14

எம் ஐ நோட்புக் 14 எம் ஐ நோட்புக் 14 ஹரிசான்  போன்று சில அம்சங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.ஹரிசானை போன்று வடிவத்தினையும், பேசல்ஸில் மட்டும் சிறிய வேறுபாட்டினையும் கொண்டுள்ளது.இண்டலுடைய ஐ 5 லேக் கோமெட் செயலியை கொண்டு உருவாக்கம் பெற்றுள்ளது. இரண்டு வகையான GPUக்களை கொண்டு உருவாக்கப்படுகிறது. 1. Intel UHD 620 GPU 2. Nividia MX 250 GPU. மேலும் 256 GB மற்றும் 512 GB SATA SSD ROM திறன்  கொண்டது.இவற்றை தவிர்த்து மற்றவை அனைத்தும் ஒரே போன்று அம்சங்களை கொண்டுள்ளது.

விலை 

எம் ஐ நோட்புக் 14 ஹரிசான்

  • இண்டல் ஐ5 10th ஜெனரேஷன் மாடல் மற்றும் நிவிடியா MX 350 GPU, 512GB NVMe m.2 Storage விலை 54,999.

  • இண்டல் ஐ7 10th ஜெனரேஷன் மாடல் மற்றும் நிவிடியா MX 350 GPU, 512GB NVMe m.2 Storage விலை 59,999.

எம் ஐ நோட்புக் 14 ( inaugural pricing till 16th July)

  • இண்டல் ஐ5 10th ஜெனரேஷன் மாடல் மற்றும் இண்டகிரேடட் 620GPU, 256GB SATA ஸ்டோரேஜ் , விலை 41,999

  • இண்டல் ஐ5 10th ஜெனரேஷன் மாடல் மற்றும் இண்டகிரேடட் 620GPU, 512GB SATA ஸ்டோரேஜ் , விலை 44,999

  • இண்டல் ஐ5 10th ஜெனரேஷன் மாடல் மற்றும் நிவிடியா MX  250 GPU, 512 GB SATA ஸ்டோரேஜ் , விலை 47,999

மேலும் வெப் கேமிரா தொழிற்நுட்பத்தை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. அமேஷான், எம் ஐ.காம் ,  எம்.ஐ ஸ்டோர், எம்.ஐ ஸ்டுடியோ போன்றவற்றில் ஜூலை 17ம் தேதி சந்தையில் விற்பனைக்கு வருகிறது.

மற்ற செய்திகளையும் படித்து பகிருங்கள்:

வெயில் காலங்களில் ஸ்மார்ட் போன் சூடாவதை தவிர்க்க 10 வழிமுறைகள்

5ஜி தொழிற்நுட்பம் மற்றும் ஸ்னாப்டிராகன் செயலியில் உருவாக்கம் பெற்ற போகோ F2 ப்ரோ

கூகுள் மீனா vs பேஸ்புக் ப்ளெண்டர் - சாட்பாட் யுத்தம்

COVID-19 காலத்தில் புதிய அம்சங்களுடன் சந்தைக்கு வந்துள்ள அலெக்சா

எம்.ஐ 10 மாடலை 108MP க்வாட் கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 865 செயலியுடன் அறிமுகப்படுத்தியது ஸியோமி

ட்விட்டர் 24 மணிநேரத்தில் மறையும் ஃபிளிட்ஸ் அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது