இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க ஃபாக்ஸ்கான் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது

by Mohan Ram
2 minutes
இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க ஃபாக்ஸ்கான் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது

ஸ்மார்ட் ஃபோன் உற்பத்தியில் இந்தியா உலகரங்கில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்தியாவின் மேக் இன் இந்தியா துவக்கத்தால் பெரும்பான்மையான அயல்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களுக்கான திரட்டும்(assembly) பணியைச் செய்கிறது. இந்தியச் சந்தையில் ஸ்மார்ட் ஃபோன் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இறக்குமதி வரி மேக் இன் இந்தியா துவக்கத்தின் மூலம் குறைந்து உள்ளதால் ஸ்மார்ட் ஃபோன் நிறுவனங்கள் இந்தியாவில் கால் ஊன்றுவதற்க்கு ஊக்கமாய் உள்ளது.

உயர்மிகு ஸ்மார்ட் ஃபோன்களை உருவாக்கும் நிறுவனங்களில் ஒன்றாக ஆப்பிள் உள்ளது. பெரும்பான்மையான ஆப்பிள் ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்யும் ஒப்பந்தத்தை சைனாவின் ஃபாக்ஸ்கான் நிறுவனம் பெற்றுள்ளது. ஆப்பிள் ஸ்மார்ட்போன்களை திரட்டுதல் (assemble) பணிக்காக இந்திய ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஸ்ரீபெரும்பத்தூரில் இயங்கி வருகிறது. குறைவான அளவிலே திரட்டுதல் பணி இந்தியாவில் செய்யப்படுகிறது. மேலும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆந்திரப் பிரதேசத்தில் ஸியோமி வகை ஸ்மார்ட் ஃபோன்களை உற்பத்தி செய்வது குறிப்பிடத்தக்கது. சைனாவில் கொரனா தொற்றின் காரணமாக ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட் போன் உற்பத்தியை துவங்க திட்டம் தீட்டியுள்ளது.

உலகின் உயர்மிகு ஸ்மார்ட் ஃபோன்களை உற்பத்தி செய்யும் ஆப்பிள் நிறுவனம் கொரனா தொற்றின் காரணமாக இந்தியாவில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் உதவியுடன்  உற்பத்தியை துவங்க உள்ளது. இந்தியச் சந்தை ஆப்பிள் ஸ்மார்ட் ஃபோன் உற்பத்திக்கு உகந்த இடமாகும். அடுத்த 3 ஆண்டுகளில் ஆப்பிள் ஸ்மார்ட் ஃபோனை உற்பத்திச் செய்ய திட்டம் தீட்டியுள்ளது. அதற்காக ஒரு பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளது. இதன் பொருட்டு 6000 ஊழியர்களை பணி நியமனம் செய்ய உள்ளது.  2021 ஆம் ஆண்டு முதல் ஆப்பிள் ஸ்டோரை உருவாக்கும் திட்டத்தில் உள்ளது. மேலும் உள்நாட்டு உற்பத்தி என்பதால் 20% இறக்குமதி வரி குறைய வாய்ப்புள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு விலையும் சற்று குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகளையும் படித்து பகிருங்கள்:

எம் ஐ நோட்புக் 14: கணினி துறையில் கால்தடம் பதிக்கிறது ஸியோமி நிறுவனம்

5ஜி தொழிற்நுட்பம் மற்றும் ஸ்னாப்டிராகன் செயலியில் உருவாக்கம் பெற்ற போகோ F2 ப்ரோ

கூகுள் மீனா vs பேஸ்புக் ப்ளெண்டர் - சாட்பாட் யுத்தம்

ஓப்போ A11K: மலிவுவிலையில் ஒரு தரமான ஓப்போ தயாரிப்பு

எம்.ஐ 10 மாடலை 108MP க்வாட் கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 865 செயலியுடன் அறிமுகப்படுத்தியது ஸியோமி

இந்தியாவில் $10 பில்லியன் முதலீடு செய்யும் கூகுள்