இந்தியாவில் $10 பில்லியன் முதலீடு செய்யும் கூகுள்

by Mohan Ram
3 minutes
இந்தியாவில் $10 பில்லியன் முதலீடு செய்யும் கூகுள்

பாரத பிரதமர் திரு.நரேந்திர மோதி மற்றும் கூகுள் நிறுவனத்தின் CEO திரு.சுந்தர் பிச்சை அவர்கள் இருவரும் காணொளி மாநாட்டின் மூலம் உரையாடலை நிகழ்த்தினர். பல்வேறு துறைகளைப் பற்றிய உரையாடலின் பின்னர் கூகுள் இந்தியா துவக்கத்தின் 6வது உரையாடலை திரு.சுந்தர் பிச்சை அவர்கள் துவங்கினார்.

 இந்த உரையாடலின் முடிவில் திரு.சுந்தர் பிச்சை அவர்கள் அறிவிப்பின்படி கூகுள் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.75,000 கோடியை டிஜிட்டல் இந்தியா அமைப்பில் முதலீடு செய்ய உள்ளது.

பங்குச்சந்தை, கூட்டுசெயல்பாடு முதலீடு,உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் கட்டமைப்பு போன்ற பல்வேறு தரப்பட்ட துறைகளில் முதலீடு செய்ய திட்டம் தீட்டியுள்ளது கூகுள் நிறுவனம்.

கூகுள் நான்கு பிரிவிற்குள் இந்த முதலீட்டை செய்ய உள்ளது.

1. அனைவரும் அவர் அவர் தாய் மொழி வழியாக தகவல்களை அறிவது.

2. இந்திய மக்களின் தேவையை உணர்ந்து அதனைச் சார்ந்த தயாரிப்புகளையும் சேவைகளையும் அமைத்தல்.

3. வர்த்தகங்களை  டிஜிட்டல் முறையில் உருவாக்குதல்.

4. சமூக, கல்வி, ஆரோக்கியம் போன்ற துறைகளில் தொழிற்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்றவற்றை பயன்படுத்துதல்.

கூகுள் இந்தியா உரையாடலை தவிர்த்து கோவிட்-19 நிலைமையைப் பற்றியும், ஆரோக்கியமான தொழிலக சூழ்நிலைகளை உருவாக்குவதை பற்றியும் பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகளையும் படித்து பகிருங்கள்:

எம் ஐ நோட்புக் 14: கணினி துறையில் கால்தடம் பதிக்கிறது ஸியோமி நிறுவனம்

5ஜி தொழிற்நுட்பம் மற்றும் ஸ்னாப்டிராகன் செயலியில் உருவாக்கம் பெற்ற போகோ F2 ப்ரோ

கூகுள் மீனா vs பேஸ்புக் ப்ளெண்டர் - சாட்பாட் யுத்தம்

ஓப்போ A11K: மலிவுவிலையில் ஒரு தரமான ஓப்போ தயாரிப்பு

எம்.ஐ 10 மாடலை 108MP க்வாட் கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 865 செயலியுடன் அறிமுகப்படுத்தியது ஸியோமி

ட்விட்டர் 24 மணிநேரத்தில் மறையும் ஃபிளிட்ஸ் அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது