மொபைல் உலகை கலக்க காத்திருக்கும் ரெட்மி 10X 5G ஸ்மார்ட்போன்

by Srinivasan
3 minutes
மொபைல் உலகை கலக்க காத்திருக்கும் ரெட்மி 10X 5G ஸ்மார்ட்போன்

அண்மையில் ஸியோமி நிறுவனம் ரெட்மி 10X வரிசையில் ஸ்மார்ட் போன்களை மலிவான விலைக்கு சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அவை ரெட்மி 10X 5G, ரெட்மி 10X 4G மற்றும் ரெட்மி 10X 5G ப்ரோ ஆகியவை ஆகும். இவற்றில் மீடியாடெக் டைமென்சிட்டி 820 ப்ரோஸஸர் மற்றும் 5ஜி தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரெட்மி 10X 5G ஸ்மார்ட் போன் வசீகரமான அம்சங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் ரெட்மி 10X 5ஜி ஸ்மார்ட் போனைப் பற்றி காண்போம்.

வடிவம் & காட்சித்திரை

ரெட்மி 10X 5ஜி ஸ்மார்ட் போன் கிளாஸ் சான்ட்விச் வடிவமைப்பையும், முன்னும் பின்னும்  கொரில்லா கிளாஸ் 5 வகை பாதுகாப்பினையும் கொண்டுள்ளது. 6.57" AMOLED வகையான  காட்சித்திரையைக் கொண்டுள்ளது. ரெட்மி 10X 5G உயர் அளவிலான 600 நிட்ஸ் பிரகாசத்தை கொண்டுளள்து.  காட்சித்திரையை மேலும் மெருகேத்த HDR10+ தொழிற்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் தொழிற்நுட்பத்தை கொண்டும் செயல்படுகிறது.

 செயலி(ப்ரோஸஸர்)

ரெட்மி 10X 5ஜி ஸ்மார்ட் போன் மீடியாடெக் டைமென்சிட்டி 820 ப்ரோஸஸர் கொண்டு செயலாற்றுகிறது. மீடியாடெக் டைமென்சிட்டி  820  ப்ரோஸஸர் 7nm அளவீடு பெற்றுள்ள வலிமையான செயலி ஆகும். மாலி G57-MC5 வகையிலான ஜி.பி.யு கொண்டுள்ளது ரெட்மி 10X 5ஜி.

 மின்திறன் மற்றும் மென்பொருள்

ரெட்மி 10X 5G  4520mah அளவீடு  மின்னாற்றல் சேமிக்கும் திறன் பெற்றது. 22.5W டைப்-ஸி வகையில் அதிவேக  மின்னாற்றலை சேமிக்கும் திறன் கொண்டது. எம்.ஐ.யூ.ஐ 11 வகை யூசர் இன்டெர்பேஸ் மற்றும் ஆண்ட்ராய்டு 10 வகை ஓ.எஸ் கொண்டு இயங்குகிறது.

கேமரா

ரெட்மி 10X 5ஜி மூன்று(triple) கேமராக்களை கொண்டது. முதன்மை கேமரா 48MP திறன் மற்றும் f/1.8 அளவு துவாரத்திறன் பெற்றுள்ளது. இரண்டாம் நிலை கேமரா 8MP அல்ட்ரா வைட் லென்ஸ்,  f/2.2 அளவு துவாரத்திறன் மற்றும் 119° காட்சிப் புலன் கொண்டது. மூன்றாம் நிலை கேமரா f/2.4 துவாரத் திறன் மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்டது.

முதன்மை கேமரா இ.ஐ.எஸ் மற்றும் 4k தொழிற்நுட்பத்தை கொண்டது. முன் கேமரா 16MP திறன் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

 உள்ளமைவு மற்றும் விலை

ரெட்மி 10X 5ஜி ஸ்மார்ட்போன் 6GB|64GB, 6GB|128GB மற்றும் 8GB|256GB போன்ற அமைப்பில் சந்தைக்கு வந்துள்ளது. அடிப்படை விலை 1599 யுவான்(இந்திய விலையில் Rs. 17, 000), உயர்நிலை மாடல் 2399 யுவான்(இந்திய விலையில் Rs. 25, 500) விலைக்கு விற்கப்படுகின்றன. இதன் இரண்டு சிம் கார்டுகளும் 5ஜி தொழிற்நுட்பத்தை சேர்ந்தவை மற்றும் மைக்ரோ ஸ்லாட்டில் விருப்பத்திற்கு ஏற்ற வரும் மெமரி கார்டை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த ஸ்மார்ட் போன் ப்ளூ, கோல்ட் மற்றும் வயலட் வண்ணங்களில் கிடைக்கிறது. இந்தியச் சந்தைக்கு வருவது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. ஒருவேளை இந்த ஸ்மார்ட் போன் Rs. 18000 க்குள் சந்தைக்கு வந்தால் மிகுந்த வரவேற்பினை பெறும் என்பதில் ஐயமில்லை.

மற்ற செய்திகளையும் படித்து பகிருங்கள்:

வெயில் காலங்களில் ஸ்மார்ட் போன் சூடாவதை தவிர்க்க 10 வழிமுறைகள்

5ஜி தொழிற்நுட்பம் மற்றும் ஸ்னாப்டிராகன் செயலியில் உருவாக்கம் பெற்ற போகோ F2 ப்ரோ

கூகுள் மீனா vs பேஸ்புக் ப்ளெண்டர் - சாட்பாட் யுத்தம்

லேப்டாப்பிற்கு மாற்றாக இருக்குமா டேப்லெட்?

கூகிள் லென்ஸ் vs மைக்ரோசாப்ட் ஆபீஸ் லென்ஸ்: உங்கள் ஸ்மார்ட் போனிற்கு எது மிகவும் பொருத்தமானது

டெஸ்க்டாப்பில் புதுப்பிப்பு கொண்டு வந்துள்ள பேஸ்புக்2020-ல் மிகப்பெரிய  தாக்கத்தை ஏற்படுத்த காத்திருக்கும் ஐபோன் 12 வரிசை